"என்னை நீ ஆட்கொண்டு விட்டாய் என்பதை விடவும், என்னை உனக்கே அர்ப்பணித்து விட்டேன் என்பதே நிஜம்.." "என் காதலிக்கு பிடிக்கும் என்பதால், நானும் சாப்பிடப் பழகிக் கொண்டேன், கொரோனா போலவே இருந்த "ரம்புட்டான்" பழத்தை..." "எந்தக் காதலன் ஜல்லி வாரி தூற்றிய சாபமோ, ரயில்களெல்லாம் ஓடாமல் நின்றுவிட்டது..." "லாக் டவுன் முடிந்து, ஒவ்வொன்றாக திறக்க ஆரம்பித்துவிட்டது என் காதலியின் இதயத்தை தவிர...." "எப்போது கோயில்கள் திறக்குமென்று ஆர்வமாய் காத்திருக்கின்றேன், சாமி கும்பிடவரும் என் காதலியை காண..." "நிச்சயிக்கபட்ட திருமணங்களெல்லாம் நின்று கிடக்கிறது, நிச்சயம் இல்லாமல்.." "மதம் சார்ந்த ஆட்சியில், மதுக்கடைகளை திறந்தும், மதக்கடைகளை மூடியும், வைத்திருப்பது பாராட்டுக்கூறியது.." "மூட வேண்டிய நேரத்தில் திறக்கிறார்கள், எத்தனை பேரை மூடுவதற்கோ....?" "கவிதை களம் காலியான பிறகு, கையில் பேனாவோடும், கண்களிரண்டில் கனவுகளோடும், கடைசியாக களம் காண வந்திருக்கும், முட்டாள் கவிஞன் நான்...."